காவிரி விவகாரம் தொடர்பாக அக்டோபர் 25ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பான அழைப்பு கடிதத்தை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாவிட்டால், திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். இதையடுத்து நாளை திமுக சார்பில் கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காது என அறிவித்துள்ளது.
இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம் நாங்கள் பங்கேற்பது பற்றி உரிய நேரத்தில் தெரிவிப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் கூறியுள்ளார்.