மைக்ரோசொப்ட் நிறுவனம் அன்ரோயிட் சாதனங்களுக்கான Office அப்பிளிக்கேஷனிற்கான அப்டேட்டினை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இப்புதிய பதிப்பானது ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவைகளான OneDrive மற்றும் Dropbox ஆகியவற்றுடன் நேரடியாக கோப்புக்களை பரிமாறிக்கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற வசதிகளுடன் iOS சாதங்களுக்கான அப்டேட்டினையும் விரைவில் அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்ரோயிட் சாதனங்களுக்கான Office அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.