அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கக் கோரி பிரதமருக்கு கடிதம்..

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் , பாகிஸ்தான் பிடியில் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்த நிலையிலும் அபரிமிதமான தீரத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியதன் மூலம் அபிநந்தன் இந்திய அளவில் அனைவரின் இதயங்களையும் வென்றதாகத் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையற்ற வீரத்தை வெளிப்படுத்திய அபிநந்தனுக்கு அதற்கான சிறப்பு அளிக்கப்படவேண்டும் என கோரியுள்ள  அவர், இந்திய ராணுவத்தின் உயர்சிறப்பு விருதான பரம்வீர் சக்ரா விருது அவருக்கு வழங்கப்படவேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

அபிநந்தன்இந்திய விமானப்படை வீரர்செண்பகம்மோடி
Comments (0)
Add Comment