அபிவிருத்தி என்பது மக்களுக்கு நல்ல வாழ்வாதாரங்களை கொடுக்கவேண்டுமே தவிர மக்களுக்கு வலியாக மிகவும் மகா பெரிய வலியாக அமைந்த இந்த திட்டம் எதிர்க்கப்படவேண்டியது.- சாந்தி சிறீஸ்கந்தராசா

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று (28) காலை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் பங்கு பற்றி உரையாற்றிய  பாராளமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா  கருத்து தெரிவிக்கையில் .

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஆக்கிரமிக்கப்படுகின்ற இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் 1984 ஆம் ஆண்டு விரட்டி அடிக்கப்பட்டு வித்தியானந்தா கல்லூரியில் வந்தபோது அன்றில் இருந்து இன்று வரை இந்தமக்களுடன் நாங்கள் இரத்த உறவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு பூர்வீகமாக வாழ்ந்த மண்மணை அபிவிருத்தி என்பது மக்களுக்கு நல்ல வாழ்வாதாரங்களை கொடுக்கவேண்டுமே தவிர மக்களுக்கு வலியாக மிகவும் மகா  பெரிய வலியாக அமைந்த இந்த திட்டம் எதிர்க்கப்படவேண்டியது.

இவ்வாறான ஆக்கிரமிப்பு எங்களுக்கு தேவையில்லை நில விடுவிப்பிற்காகத்தான் எவ்வளவோ உயிரர்களை சொத்துக்களை இழந்துள்ளோம் எனவே இந்த திட்டம் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு அரசிற்கு குரல் கொடுத்து திட்டத்தினை நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவோம்.

கூட்டமைப்பு எந்தஒருவேளையிலும் மக்களை ஏமாற்றாது மக்களை பிளையான வழிக்கு திசைதிருப்பாது மக்களின் நின்மதியான வாழ்விற்கு எப்போதும் குரல் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்புகூட்டமைப்புசாந்தி சிறீஸ்கந்தராசாவாழ்வாதாரங்கள்
Comments (0)
Add Comment