அபிவிருத்தி, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு உதவுவதாக ஜப்பான் வாக்குறுதி

சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக ஜப்பான் உறுதியளித்துள்ளது.

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவிடம், ஜப்பானிய் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கஷுயுகி நகானே  இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், கடலோரக் காவல் படையைப் பலப்படுத்துவதற்கும் ஜப்பான் அளித்து வரும் ஆதரவுக்கு சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திஉதவிகளை வழங்குவதாககடல்சார்ஜப்பான் வாக்குறுதி
Comments (0)
Add Comment