சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பல்வேறு அம்சங்களை கடைபிடிக்க தவறியதால் அபுதாபி நகரில் உள்ள அஞ்சப்பர் ஓட்டல் கிளையை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் அஞ்சப்பர் அசைவ உணவகத்தின் கிளைகள் மிகவும் பிரபலமாக இயங்கி வருகின்றன.
சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பல்வேறு அம்சங்களை கடைபிடிக்க தவறியதால் அங்குள்ள அஞ்சப்பர் ஓட்டல் கிளையை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
சமையல் அறையில் பூச்சிகள் நடமாட்டம் ,இருப்பு வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களின் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை போன்றவிடயங்களோடு.
ஒழுங்கான பயிற்சி பெறாத பணியாளர்கள் அங்கு பணிபுரிவதாக பல்வேறு குறைகளை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை சரிப்படுத்துமாறு எச்சரித்துள்ளனர்.
எனினும் அவர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இயங்கி வந்ததால் அஞ்சப்பர் ஓட்டல் கிளையை அதிகாரிகள் மூடியுள்ளதாக அபுதாபியின் பிரபல நாழிதளான கலிஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்வரை இந்த ஓட்டல் மூடப்பட்டு இருக்கும் என அபுதாபி நாட்டின் உணவு கட்டுப்பாட்டுத்துறை செய்தி தொடர்பாளர் தாமெர் அல் காசிமி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.