‘விஷன் இந்தியா’ கட்சிக்கு மக்களிடமிருந்து போதிய வரவேற்பு கிடைக்காமல் பொன்னுராஜ் இருந்து வந்தார். எனவே கட்சியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தம்முடைய கட்சிக்கு ஒரு நம்பிக்கையான தலைமையை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நேற்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பொன்னுராஜ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், அரசியல் சம்பந்தமான ஆலோசனையே முக்கியto இடம் பெற்றுள்ளது.
நதிகள் இணைப்பில் ரஜினி மிகவும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போதும் நதிகள் இணைப்பு, அரசியல் நிலவரங்கள் பற்றிய ஆலோசனையே விரிவாக பேசப்பட்டது. தனது அரசியல் ஆர்வத்தின் காரணமாகவே அரசியல் பற்றி மிக ஆழமான சிந்தனைகளுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையின் போது ரஜினி அரசியலுக்கு வருவது உதவியாக இருக்கும் என்ற கருத்தை பொன்ராஜ் தெரிவித்துள்ளார். கடவுள் விருப்பம் அதுவாக இருந்தால் கண்டிப்பாக நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய முக்கிய தகவல்களை பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. இணைய தளங்களில் இன்று பரபரப்பு செய்தியாகவும் இடம்பெற்றுள்ளது.
ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிக்கும் படம் முடிந்ததும் அடுத்த வருடம் அவர் அரசியலில் குதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.