அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை கொண்டாடும் தீவிரவாதிகள்…

இலங்கையில் நடத்­தப்­பட்ட குண்­டுத் தாக்­கு­தல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பின் ஆத­ர­வா­ளர்­கள் கொண்­டாடி மகிழ்ந்­துள்­ளதாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

நேற்­று­முன்­தி­னம் கொழும்­பி­லும், மட்­டக்­க­ளப்­பி­லும் நடத்­தப்­பட்ட குண்­டுத் தாக்­கு­தல்­க­ளில் 310 பேர் உயி­ரி­ழந்­த­ நிலையில் 500க்கும் மேற்­பட்­ட­வர்­கள் காய­ம­ந­டைந்­துள்ள­னர்.

குறித்த தாக்­கு­தல்­கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கின்­றது.

இந்­த­நி­லை­யில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பின் இணைய நட­வ­டிக்­கை­க­ளை­யும், சமூக வலைத்­தள நட­வ­டிக்­கை­க­ளை­யும் கண்­கா­ணிக்­கும் சயிட் என்­னும் புல­னாய்வு அமைப்பு இலங்­கை­யில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலை அந்த அமைப்­பி­னர் கொண்­டாடி மகிழ்ந்­துள்­ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள்
Comments (0)
Add Comment