அமெரிக்கத் தூதரகத்தின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.- ருவான் வணிகசூரிய

இலங்கையில் நடைபெற்ற போரின் போது, இரணப்பாலையில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் இலங்கை ராணுவத்தின் ஷெல் வீச்சுத் தாக்குதலால் கொல்லப்பட்டனர் என்ற அமெரிக்க தூதரகக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்திருக்கிறது.

இந்த குறிப்பிட்ட இடத்தை விடுதலைப்புலிகள் தங்களது கொல்லப்பட்ட போராளிகளின் உடல்களை ஒப்புவிப்பதற்காகப் பயன்படுத்தியதாக, உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள் என்றும், இது பாதுகாப்பான இடமாக இல்லாவிட்டால், அதை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என்றும் இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

 பொதுமக்கள் இருந்த போது, இந்த இடத்தில் ஷெல் தாக்குதல் சம்பவம் ஒரு போதும் நடக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுவதாகவும் பிரிகேடியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கின்றார்.

அமெரிக்கத் தூதரகத்தின் குற்றச்சாட்டு ‘அடிப்படையற்றது’ என்று கூறும் இலங்கை ராணுவப் பேச்சாளர், நம்பகத்தன்மையுடன் சரிபார்க்கப்படாமல் இத்தகைய ஒரு குற்றச்சாட்டை அமெரிக்கத் தூதரகம் முன்வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment