இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழப் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக சிங்கள அரசோடு, அமெரிக்கா கைகோர்த்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனைக் கண்டித்து வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா மனித உரிமை மன்றத்தில், இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொந்த அரசியல் மற்றும் பூகோள அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தமிழர்களை பகடைக்காயாக அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையம் மற்றும் அதன் ஆணையரை மட்டுமே ஈழத் தமிழர்கள் நம்பியுள்ளதாகவும் ராமதாஸ் சுட்டிகாட்டியுள்ளார்.