அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாயூ பகுதியில் எரிமலை சீற்றம் அதிகரித்துள்ளது.
தீக்குழம்பு ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எரிமலையில் இருந்து வெளியேறிய தீக்குழம்புகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்ததால் அங்குள்ள வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் எரிமலையில் இருந்து தீப்பிழம்புகள் வேகமாக வெளியேறி வருவதால், இதன் தாக்கம் மேலும் பல்வேறு இடங்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.