அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, டொனால்ட்
இதுவரையிலான முடிவுகளின்படி, ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 279 தேர்வாளர் குழு (எலக்ட்டோரல் காலேஜ்)வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார். எனவே டிரம்பின் வெற்றி உறுதியாகி விட்டது. முன்னதாக, அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியானபோது, அவர் புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.
கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியுள்ள அவர் இதுவரையிலும் 219 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் நாட்டிற்கு தனது முழு ஆதரவை வழங்கியிருந்த நிலைமையில் பாலஸ்தீன மக்களை முழுமையாக வெளியேற்ற எல்லா விதமான உதவிகளையும் செய்ய தயங்க மாட்டார். இதனால் எதிர் வரும் காலங்களில் யுத்தம் இன்னமும் தீவிரமடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.இதனால் பெருமளவான அப்பாவி மக்கள் கொல்லப்படும் நிலைமை உருவாகும்.கடந்த காலத்தில் அதிபராக இருந்த போது முஸ்லிம் மக்களை நாட்டுக்குள் வர தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.