அமைச்சரவை மாற்றத்தால் வடக்கு அபிவிருத்தி திட்டங்கள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
50 ஆயி ரம் வீடுகள் அமைக்கும் திட்டம், வலி. வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கான உதவிகள் வழங்கல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை அமைக்கும் பணி
கள், ஜனாதிபதியின் கீழிருந்த தேசிய ஒருமைப்பாடு நல்லி ணக்க அமைச்சால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஒப்பந்தகா ரர்களைத் தெரிவு செய்யும் பணி நிறைவடைந்திருந்த நிலையில்,.ஒப்பந்தம் கையளிப்பதற்கு அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட இருந்தது.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சு
இந்நிலையில் . அமைச்சரவை மாற்றத்தின் போது, ஜனாதிபதியின் கீழிருந்த தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சு, அமைச்சர் மனோகணேசனின் அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு அபிவிருத்திக்கு தனியான அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடமாகாண திட்டங்கள் எந்த அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்பட உள்ள்ளது என்பது இன்னமும் தெரியவரவில்லை.
இதன் காரணமாக, வடக்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.