அமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜெயசேகர நியமனம்

சிறிலங்கா அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் இவர் அமைச்சரவை இணைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் பணியாற்றி வரும் நிலையில் மூன்றாவது இணைப் பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் மூன்று அமைச்சரவை இணைப் பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

கயந்த கருணாதிலகதயாசிறி ஜெயசேகரராஜித சேனாரத்ன
Comments (0)
Add Comment