அமைச்சர் சம்பிக்க ரணவக்க முல்லைத்தீவுக்கு விஜயம்….

கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில்  பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை பார்வையிட  அமைச்சர் சம்பிக்க ரணவக்க மக்களுடன் கலந்துரையாடலை  மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவு விஸ்வமடு பாரதி  வித்தியாலய மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்துள்ளார்.

நிகழ்வில் அமைச்சருடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன்   அமைச்சின் அதிகாரிகள் முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

இதனை தொடர்ந்தும் பல்வேறு பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கான கற்றல் உபகரணங்கள் வலயக்கல்வி பணிப்பாளரிடம் கையளித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்கமுல்லைத்தீவுவகற்றல் உபகரணங்கள்வலயக்கல்வி பணிப்பாளர்
Comments (0)
Add Comment