அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்னால் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இன்று வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளில் இருந்தும் 75க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கும், புற்றுநோயாளிகளுக்கும் தரமற்ற மாத்திரைகள் வழங்கப்படுவதாகவும் அவ்வாறான செயற்பாட்டிற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க கூடாது எனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாட்சியங்களுடன் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கவனயீர்ப்பு
Comments (0)
Add Comment