டெல்லியில் மரணமடைந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களுக்கு செவ்வி வழங்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தயாரான நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டெல்லியில் மரணமடைந்த மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு பலரும்; அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் அஞ்சலி செலுத்தினார்.இதன்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து கொண்டிருக்கையில், நபர் ஒருவர் மத்திய அமைச்சரை நோக்கி காலணியை வீசியுள்ளார். இருப்பினும் காலணியானது ஊடகங்கள் சார்பில் நீட்டப்பட்டிருந்த மைக்குகளுக்கு அருகில் விழுத்துள்ளது.
மேலும் காலணி வீசியவரை விரட்டிப் பிடித்துள்ள பொலிஸார், குறித்த நபரிடம் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.