அமைச்சுப் பொறுப்புக்களை துறந்த 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
ஹம்பந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சுப் பொறுப்புக்களை துறந்த அமைச்சர்கள் தங்கள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் அடுத்த வாரத்தில் இருந்து அவர்களுக்கு பதில் வழங்கும் பணிகள் ஆரம்பமாகும் எனவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.