அம்மன் தாலியைத் திருடிய விசமிகள்…

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மேபீல்ட் தோட்ட சாமஸ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு அம்மன் தாலி களவாடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2018.04.20 அன்று குறித்த ஆலய கும்பாபிஷேகதின்போது அம்மனுக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க தாலி அணிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  திம்புள்ள பத்தனை பொலிஸில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முறைப்பாட்டின்  அடிப்படையில் பத்தனை பொலிஸாரும், நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரும், கைரேகை ஆய்வு பிரிவினரும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

அம்மன்தாலிதிம்புள்ள பத்தனைதிருட்டுஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
Comments (0)
Add Comment