அம்மா கைபேசித் திட்டம்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான அம்மா கைபேசித் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.

இன்று முற்பகல் 11 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி மூலம் பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் அதி நவீன வசதிகளுடன் அரசு பணியாளர்களுக்கான 700 குடியிருப்புக்கள் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தன. அதை இன்று முதல்வர் திறந்து வைத்தார். மேலும், பல்வேறு ஊர்களில் கட்டப்பட்டு இருந்த மேம்பாலங்கள், கட்டிடங்களைத் திறந்து வைத்தார் ஜெயலலிதா.

அதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான இலவச கைப்பேசிகளை வழங்கும் திட்டத்தையும் இன்று துவக்கி வைத்தார்.15 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டு இருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் 20 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பெண்கள் பயனடைவார்கள் என்றும் தெரிய வருகிறது.

அம்மாஉதவிகுழுகைபேசிசுயஜெயலலிதாதமிழகம்திட்டம்மகளிர்முதல்வர்
Comments (0)
Add Comment