அரசவாகனங்கள் மற்றும் சொத்துக்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு…

அரச வாகனங்கள், சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றை தினம்   நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களைத் தவிர முன்னாள் பிரதி, இராஜாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், குழுக்களின் பிரதித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ,

எந்தவொரு நபரும்  அரச வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பயன்படுத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம் வசம் உள்ள அனைத்து அரச வாகனங்கள், சொத்துக்களை உரிய அமைச்சுக்களின் செயலாளர்களிடம் ஒப்படைக்குமாறும் கூறியுள்ளார்.
அவ்வாறு ஒப்படைக்க தாமதமாகினால் பொலிஸாரைப் பயன்படுத்தி   குறித்த வாகனங்கள் சொத்துக்களை மீளப் பெறுவதுடன்,   அவர்களிற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி  எச்சரித்துள்ளார்.
இதேவேளை  தமிழர்களின் வாக்குகளைப் பெற்று  ஏகபோக சுகபோக வாழ்வை அனுபவித்துவந்த எதிர்கட்சித்தலைவர் சம்பந்தன்,
மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அரச வாகனங்கள்உத்தரவுஒப்படைத்தல்சொத்துக்கள்ஜனாதிபதி
Comments (0)
Add Comment