அரசியலுக்கு வரமாட்டேன் – திட்டவட்டமாக கூறியுள்ளார் ரஜனி

அரசியலுக்கு வரமாட்டேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி திட்டவட்டமாக கூறியுள்ளார். கோவாவில் நடைபெறும் 45-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரையுலக பிரபலம்” என்ற விருதினை மத்திய அரசு ரஜினிக்கு வழங்க உள்ளது.

இதில், கலந்துகொள்ள வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரசியலில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பல்வேறு கட்சிகள் ரஜினியை தங்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தபோதும், அந்த அழைப்புகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள ரஜினி, இதன் மூலம் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அரசியல்கோவாசர்வதேசம்சூப்பர் ஸ்டார்திட்டவட்டம்திரைரஜனிவிழா
Comments (0)
Add Comment