அரசியல் கட்சிகளின் செலவினங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு: ராஜேஷ் லக்கானி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் செலவினங்களை ஆய்வுசெய்ய முதற்கட்டமாக 12 பேர் கொண்ட குழு தமிழகம் வர இருப்பதாக ‌தலைமைத் தேர்தல் அதிகாரி ‌ராஜேஷ் லக்கானி‌ தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கைக்கு முன்னரே பார்வையாளர்கள் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என்றும் அவர் கூறியுள்ளார். 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் சென்னை வரும் செலவின பார்வையாளர்கள், 4 குழுக்களாகப் பிரிந்து தமிழகம் முழுவதும் ஆ‌ய்வு செய்ய இருப்பதாக லக்கானி தெரிவித்துள்ளார்.

செலவின பார்வையாளர்களில் பெரும்பாலானோர் வருமானவரித்துறை அதிகாரிகள் என்றும், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள செலவுக் கணக்கு அறிக்கையை பார்வையாளர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள்ஆய்வுக் குழுதமிழகம்ராஜேஷ் லக்கானி
Comments (0)
Add Comment