தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவராக இருந்த பசீலன் அவர்களின் தாயரான நல்லையா தங்கம்மா அவர்கள் முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 05.04.19 அன்று சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரின் இறுதி நிகழ்வுகள் 07.04.19 அன்று முள்ளிவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
பசீலன் அவர்களின் தாயாரின் உயிரழப்பினை தொடர்ந்து அவரின் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்ரான சிறீதரன்,அவர்கள் சென்று உடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களனாசாந்திசிறீஸ்கந்தராசா,சிவசக்திஆனந்தன்,சி.சிவமோகன், வடமாகாண சபை முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவனேசன் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன்,தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து வணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த வீரத்தாயின் இறுதி நிகழ்வு அரசியல் வாதிகள் மக்களின் இறுதி வணக்கதுடனும் பெருமளவான மக்களின் மலர் வணக்கத்துடனும் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று அங்சலி உரைகள் என்பன இடம்பெற்று முள்ளியளை கற்பூரப்புல் இந்து மயானத்தில் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது