அரச ஊழியர்கள் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியதாரர் ஆகியோருக் கான அகவிலைப்படி உயர்த்தப்படும் போது மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது வழக்கம்.

அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி அகவிலைப்படி 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்தது. எனவே தமிழக அரசும் அதுபோல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை அதே அளவில் உயர்த்தி கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவைப் பெற்று இதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்திருந்தார். இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 18 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இதற்கான அரசாணையை நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தற்போது வெளியிட்டுள்ளார்.

அகவிலைப்படிஅரச ஊழியர்இந்தியாஉயர்வுஓய்வூதியர்தமிழகஅரசுதேர்தல்மத்தியஅரசுவிதி
Comments (0)
Add Comment