அரச வீட்டுத்திட்டத்தில் ஆறு வருடமாக ஒருவர் கூட குடி வராத நிலையில் மீண்டும் ஒரு அரச வீட்டுத்திட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கடந்த 2012ஆம் ஆண்டு 50 அரச உத்தியோகத்தர்களுக்கு என புதிதாக காடுகள் அழிக்கப்பட்டு அரை ஏக்கர் காணி வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மானியம் 2 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டு மக்கள் வாழ்கின்ற பகுதிகளை விட முன்னுரிமை படுத்தப்பட்ட அடிப்படையிலே மின் இணைப்புகள் குடிநீர் வசதிகள் பாதைகள் என்பன சீர் செய்யப்பட்ட போதும் ஆறு வருடங்களாக இன்றுவரை ஒருவர் கூட அங்கு குடியேறவில்லை.

இந்நிலையில் அந்தப் பகுதி மிகவும் காடாகவும் சமூக சீர்கேடான சம்பவங்கள் நடைபெறுவதற்கு பக்கபலமாக அந்த இடம் மாறிக் கொண்டிருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான குறித்த பகுதியில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பலருக்கு   வேறு இடங்களில்  வீடு வழங்குவதற்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கண்டுகொள்ளாது இருந்து வருகின்றது.

இந் நிலையில் இதுவரை ஒருவர் கூட குடியிருக்காத  நிலையில் மீண்டும் ஒரு அரச உத்தியோகத்தர்களுக்கான வீட்டு திட்டம் ஒன்றை அயல் கிராமமான மாங்குளம் பகுதியில் அமைப்பதற்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

குறிப்பாக இந்த பனிக்கனகுளத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகளில் ஒரு வீட்டில் கூட இதுவரை எவரும் குடியேறாத நிலையில் அந்த  வீட்டினை  பெற்றவர்கள் வேறு  இடங்களிலும் வீடுகளை  அவர்கள் பெற்றுக்கொண்ட போதும் இந்த வீடுகளை பறிமுதல் செய்து  அரச அதிகாரிகளுக்கு கொடுத்து அந்த இடத்தில்  இருத்தாது மீண்டும் ஓர் இடத்தில் புதிதாக அரசு அதிகாரிகளுக்கு என வீட்டுத்திட்டம் அமைப்பதால் இதேபோன்று அந்த இடமும் ஒரு சமூக சீர்கேட்டுக்கு காலப்போக்கில் வழிவகுக்கக் கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றுகின்ற வெளி மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு இந்த வீட்டுத் திட்டத்தில் பயனாளிகள் தெரிவாக இடம்பெற இருக்கின்ற போது மக்கள் மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளது ஐந்து வருடங்கள் சேவையாற்றிய பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அந்த அரசஉத்தியோகத்தர்கள் மாற்றலாகி வேறு  இடங்களுக்கு செல்கின்ற போது அந்த வீடுகள்  காடுகளாக மாறி  சமூக சீர்கேடுகளுக்கு உகந்த இடமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக நான்கு வருட சேவைகளை நிறைவு செய்தவர்கள் ஐந்து வருட சேவையை நிறைவு செய்து மாற்றலாக  இருக்கின்றவர்கள் மற்றும் மூன்று நான்கு வருடங்கள் சேவையாற்றியவர்கள் என பலதரப்பட்டவர்களுக்கான வீடுகள் இந்த இடத்திலே வழங்கப்பட இருக்கிறது.அவர்களுடைய ஐந்து வருட சேவை காலம் நிறைவு பெற்றதும் இவர்கள் அந்த வீட்டில் வசிக்காத  நிலை ஏற்படும்

இப்போது பனிக்கன்குளம் அரச வீட்டுத்திடடத்துக்கு   ஏற்பட்டிருக்கின்ற நிலைமையே மீண்டும் அதற்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது அரச அதிகாரிகள் தாங்கள் இங்கு தங்கியிருந்து செவ்வனே தங்களுடைய சேவைகளை செய்வதாக இருந்தால் ஏற்கனவே பனிக்கங்குளம் பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்ற வீட்டு  திட்டத்தை  முன்னைய பயனாளிகள் ஏற்கனவே  வேறு இடத்தில் வீடு பெற்று இருக்கின்ற காரணத்தினால் அவர்களுடைய பெயரில் இருந்து ரத்து செய்து புதிதாக வீடு தேவையானவர்களுக்கு இந்த வீடுகளை திருத்தி அதே இடத்தில் வீடுகளை கொடுப்பதன் ஊடாக இந்த இடத்தில் நடைபெறுகின்ற சமூக சீர் கேடுகளையும் எதிர்காலத்தில் நடைபெற இருக்கின்ற சம்பவங்களையும் தடுப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும்  இந்த வீட்டுத் திட்டத்திற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் புதிதாக    அரச அதிகாரிகளுக்கான ஒரு வீட்டுத்திட்டத்தை அமைப்பதற்கு முயற்சிக்கின்றமையானது பலத்த சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது

இது தொடர்பில்  பிரதேசத்தில் இருக்கின்ற அரசியல் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகள் உயரதிகாரிகள் மாகாண ஆளுநர் மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த விடயத்தில் தங்களுடைய பார்வையைத் திருப்பி இந்த பிரச்சனையை உரிய முறையில் தீர்ப்பதற்கும் புதிதாக வீட்டுத்திட்டம் அமைப்பதை தடுக்க முன்வர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள்முல்லைத்தீவு
Comments (0)
Add Comment