அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சிய அறைகள் – பிரதமர் பாதுகாப்பு பிரதானி..

அலரி மாளிகைக்குள் பாதுகாவலர்கள் பயன்படுத்தும் ஆயுத களஞ்சிய அறைகள் இரண்டு உள்ளதாகவும், அதன் பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை  பிரபல கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் பாதுகாப்பு பிரதானியினால் பொலிஸ் மா அதிபரிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையில் புராதன பெறுமதியான பொது சொத்துக்கள் ஆபத்தில் உள்ளதாகவும், அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

மேலும் தற்போது அலரி மாளிகைக்கு பல்வேறு நபர்கள் சென்று வருவதன்  காரணமாக,  புரதான பொருட்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் பாதுகாப்பு பிரதானி  கூறியுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அலரி மாளிகைபாதுகாப்பு பிரதானிபிரதமர்பொலிஸ் மா அதிபர்
Comments (0)
Add Comment