அழிவின் விளிம்பில் உள்ள சைபீரியப் புலி ஒன்று அடர்ந்த வனப்பகுதியில் 4 குட்டிகள் ஈன்றுள்ளது.
ரஷ்யாவில் உள்ள லெப்பர்ட் தேசியப்பூங்காவில் மலை உச்சியில் சைபீரியப் புலி ஒன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளது.
இதனைக் கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள் குட்டிகள் இருக்கும் இடத்தில் ரகசியமாக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.
அதில் நான்கு குட்டிகளுடன் தாய்ப் புலி இருப்பதும், குட்டிகள் அங்குமிங்கும் நடமாடுவதும் தெரியவந்தது. இதையடுத்து புலிக்குட்டிகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.