அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக அவர், நீதிபதி ஆதிநாதன் முன் ஆஜரானார். கருணாநிதியின் வருகையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். நான்காண்டு கால அதிமுக அரசை விமர்சித்து முரசொலியில் எழுதப்பட்ட கட்டுரை தொடர்பாக அந்த நாளேட்டின் ஆசிரியர் எஸ் செல்வத்திற்கும், கருணாநிதிக்கும் எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அவதூறு வழக்குகளில் திமுகவுடன் இணைந்து போராடுமாறு பிறகட்சிகளை கட்டாயப்படுத்தப் போவதில்லை எனக் கூறினார். அதிமுக அரசைப் பற்றி என்ன பேசினாலும் அவதூறு வழக்கு தொடரப்படுவதாகவும், இவ்விசயத்தில் நீதி வெல்லும் என்றும் கருணாநிதி கூறினார்.