அஸ்கிரியபீட தேரரை சந்தித்த வடமாகாண ஆளுநர்…

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரரை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  இன்று சந்தித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் வடக்கில் முதலாவது பௌத்த மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில்  இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பௌத்த விகாரைகள் அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில்  தமிழ் தரப்புக்கள் பலவும் ஆளுநரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில் இத்தகைய சந்திப்பு நடந்துள்ளது.
இதேவேளை வழமையாக தமிழ் ஆளுநர் ஒருவரை வடக்கிற்கு நியமிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்த அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகள் சுரேன் இராகவன் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அஸ்கிரியசுரேன் இராகவன்வடமாகாண ஆளுநர்
Comments (0)
Add Comment