ஆசிபா கொலைக்கு நீதிவழங்ககோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபா கடத்தப்பட்டு கூட்டாகப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டமை பலரது மனங்களையும் வேதனைக்குள்ளாக்கியிருந்தது.

இந்நிலையில் ஆசிபா கொலைக்கு  நீதி வழங்கக் கோரி கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் இன்று கண்டனப் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது.

ஐக்கிய சமாதான முன்னனி ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணியில் இன மத பேதத்துக்கு அப்பால் அனைவரும் கலந்து கொண்டு, சிறுமி ஆசிபாவின் கொலைக்கு நீதி கிடைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு குறித்த ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள்விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிபாஇந்திய உயர்ஸ்தானிகராலயம்ஐக்கிய சமாதான முன்னனிகொலை
Comments (0)
Add Comment