ஆசிரியை தாக்கி மாணவி மருத்துவமனையில் அனுமதி!

கொடபிடிய கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்பதை சேர்ந்த வகுப்பு தலைவியை (வயது 14) சுகாதார பாட ஆசிரியை மரப்பலகை ஒன்றினால் தாக்கியதில், அவரது இடது கையில் தோள் கிழிந்து அகுரஸ்ஸ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாடசாலையின் உடற்பயிற்சிக்கு செல்லாததன் காரணமாகவே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக மாணவி தெரிவித்தார். மாணவியின் பெற்றோர் கூறுகையில், தனது மகள் தாக்கப்பட்டதால் கையில் உள்ள நரம்பு உடைந்துள்ளதாக ஆயுர்வேத வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மாணவியின் கற்றல் செயற்பாடு தடைப்பட்டுள்ளதோடு மன அழுத்தத்துக்கும் உள்ளாகியுள்ளார். பெற்றோர்களாகிய நாங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அகுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனுமதிஆசிரியைகாயம்தாக்குதல்மருத்துவமனைமாணவி
Comments (0)
Add Comment