ஆட்டோவின் மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலித்தால் அபராதம் – சென்னை காவற்துறை

சென்னையில் ஆட்டோவின் மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலித்தால்  2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆட்டோ மீட்டர் பொருத்தப்பட்ட பிறகும் கூட சில ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர்களை உபயோகப்படுத்துவது  இல்லை.  அது மட்டுமின்றி ஆட்டோவின் மீட்டர் காண்பிப்பதற்கு மேல் கட்டணம் வசூலிப்பதும் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதுத் தொடர்பாக புகார் வந்ததை அடுத்து, காவல்துறை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால் ஓட்டுனருக்கு 2ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஓரிரு முறை இப்படி அபராதம் வசூலிக்கப்படும் என்றாலும், இது போன்று தொடர்ந்து நடந்துக் கொண்டால், கடைசியாக ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இப்படிப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களைக் கண்டறிய சென்னை முழுவதும் 24 குழுக்களை நியமிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை வருகிற திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று தெரிய வருகிறது.

அபராதம்ஆட்டோஆயிரம்கட்டணம்காவற்துறைசென்னைமீட்டர்வசூல்
Comments (0)
Add Comment