ஆதரவு அளிக்காவிட்டால் அரசாங்கத்தை முடக்கி விடுவேன் – டிரம்ப் எச்சரிக்கை

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் ஓட்டு போடாவிட்டால், அரசாங்கத்தை  முடக்கி விடுவேன்’’ என   அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில், குடியேற்ற சட்டங்களில் திருத்தம் செய்ய அதிபர் டொனால்டு டிரம்ப் முயன்று வருகிறார்.
அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அங்கு  பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புதல் உள்ளிட்ட  திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.
அவரின் இந்த திட்டங்களிற்கு  பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள், அவற்றுக்கு ஆதரவு அளிக்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிரம்ப் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘ எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் ஓட்டு போடாவிட்டால், தான் அரசாங்கத்தை முடக்கி விடுவேன்’’ என்று கூறியுள்ளமை குறிபிடத்தக்கது..
அதிபர்அமெரிக்காடிரம்ப்திட்டங்கள்
Comments (0)
Add Comment