ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர்களுக்கான புதிய திட்டம் – ஜெ அறிவிப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கான புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பழங்குடியினர்களுக்கான 25 உண்டிஉறைவிட பள்ளிகளில் ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் புதூர்நாட்டில் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளிக்கு 3 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் விடுதி கட்டவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் ஆயிரம் ஆதிதிராவிட விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கிருத்துவ தேவாலயங்களின் புனரமைப்புப் பணிகளுக்காக 3 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். பள்ளி வாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு தொகுப்பு நிதி உருவாக்கப்படும் என்றும், அதற்கு 3 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அறிவிப்புஆதிராவிடர்சிறுபான்மைஜெயலலிதாபழங்குடியினர்புதியதிட்டம்
Comments (0)
Add Comment