ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, உயிரிழந்த தமிழர்களின் உறவினர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று 16 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. அதேபோல், சுட்டுக்கொல்லப்பட்ட இடம் குறித்து ஆய்வு செய்தும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், என்கவுன்டர் என்ற பெயரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற மேற்பார்வையில், தமிழகம்-ஆந்திரம் அல்லாத வேறு மாநில நீதிபதிகளைக் கொண்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘இதனிடையே, தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.