இந்த நிகழ்வுக்கு வருகை சென்ற ஜனாதிபதியிடம் ஆயுள் தண்டனை கைதியான ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிக்க நீண்ட நேரம் காத்திருந்த போதும் ஜனாதிபதி அச்சிறுவர்களை சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது..
நீண்டநேரமாக காத்திருந்த இரண்டு சிறார்களும் மனமுடைந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியமை பார்த்திருந்தவர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தாயை இழந்தும் தந்தையை பிரிந்தும் வாழ்ந்து வரும் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளான கனிதரனும் சங்கீதாவும் தமது தந்தையை மன்னித்து விடுவிக்குமாறு கோரும் கடிதத்துடன் ஜனாதிபதியை சந்திப்பதற்கு சிறிலங்கா சுந்திர கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான ஜ.அசோக்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
இருவரும் பல தடவைகள் ஜனாதிபதியை சந்தித்து தங்களது கடிதத்தை வழங்கிவிட முயற்சி செய்த போதும் அது கைகூட வில்லை எனவும் குரிப்பிடப்பட்டுள்ளது .
சிறுவர்கள் இருவரையும் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியிடம் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. .
இந்த நிலையில் அவர்கள் பிரிதொரு அதிகாரியிடம் விடயத்தை கூற அவர் சற்று நேரம் கழித்து வந்து ஜனாதிபதி நிகழ்வு முடிந்து புறப்படும் நேரம் வாகனத்தின் அருகில் சென்று கடிதத்தை வழங்குமாறு தெரிவித்திருந்த நிலையில் , இறுதியில அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் கடிதத்தை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனிடம் வழங்கிவிட்டு சிறுவர்கள் வீடு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது
இதேவேளை ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் முன்னர் ஜனாதிபதியை சந்தித்தது போது “சித்திரை புதுவருடத்தின் போது தந்தையை விடுவிப்பதாக” அவர்களிடம் ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது