ஆனந்த விகடன் மீது அவதூறு வழக்கு: வைகோ கண்டனம்

ஆனந்த விகடன் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் துயரத்தைப் போக்கும் விதத்தில் உரிய கடமை ஆற்றாத தமிழக அரசு, அரசின் குறைகளை சுட்டிக் காட்டும் பத்திரிகைகள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 ஜனநாயகத்தை நசுக்க முனைந்த அனைவரும் மக்களால் தூக்கி எறியப்பட்டனர் என அவர் கூறியுள்ளார். ஆனந்த விகடன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்றும் பத்திரிகைகள் மீதான மிரட்டலை முற்றாகக் கைவிடவேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அவதூறு வழக்குஆனந்த விகடன்ஜனநாயகம்தமிழக அரசுவைகோ கண்டனம்
Comments (0)
Add Comment