ஆபத்தான பறவையை வளர்த்து வந்த 75 வயது முதியவர் அந்த பறவையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் வடக்கு பிளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மார்வின் ஹாஜோஸ் என்பவர் தனது பண்ணை வீட்டில் பல அரிய வகை பறவைகளை வளர்த்து வந்தார்.
அவற்றுள் உலகின் ஆபத்தான பறவை இனத்தை சேர்ந்த கசோவோரிஸ் ((Cassowaries)) எனும் பறவையால் குறித்த முதியவர் மார்வின் தாக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை 5.6 அடி வரை வளரக்கூடிய பறக்க முடியாத குறித்த பறவை இன்னும் முதியவரின் பண்ணை வீட்டில் இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.