ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தலைநகர் காபூலில் உதவி மையம் ஒன்றில் நின்றிருந்த பொதுமக்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அங்கு கூட்டத்தோடு மறைந்திருந்த பயங்கரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் , 25 பேர் படுகாயங்கயமடைந்துள்ளனர்.
இதேவேளை இஸ்லாமியர்கள் கொண்டாடும் புனித ரமலான் மாதத்தில் நடந்தப்பட்டுள்ள 3வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.