ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் – 30 பேர் பலி..

ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி தீ வைத்ததில் 30 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின்  ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள்,  சமீபமாலமாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து  தாக்குதல்களை நடத்தி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இழந்த  தமது பகுதிகளை மீட்க பாதுகாப்பு படையினரும் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறனர்.

இந்நிலையில், பக்லான் மாகாணம் பக்லான் இ மர்காசி மாவட்டத்தில் உள்ள இரண்டு போலீஸ் சோதனைச்சாவடிகள் மீது நேற்று நள்ளிரவில் தலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீஸ் தரப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை  தெற்கு ஜாபூல் மகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது தலிபான்கள்  இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலின்போது  தலிபான்கள் தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

30 பேர்தலிபான்கள்தாக்குதல்பொலிஸார்
Comments (0)
Add Comment