இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் போன்றவற்றை நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான இசை நிகழ்ச்சி, திரையரங்க வெளியீடுகள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால், 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேட்பாளர்களின் தற்காலிக சாவடிகளில் அப்பகுதியைச் சார்ந்த குற்றப்பின்னணி இல்லாத வாக்காளர் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்றும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியின் எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி இடத்தில் இருந்து வாகனங்கள் கண்காணிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.