மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், ஆயிரத்து 500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்.கே. நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மத்திய துணை ராணுவ படையினரும், காவல்துறையினரும் நேற்று கொடி அணி வகுப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.