ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குக்கள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்குத் தொடங்கி 17 சுற்றுகளாக நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்கே நகர் தொகுதி 181-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 மறுவாக்குப்பதிவு ஏன் என விளக்கம் அளித்துள்ள சக்சேனா, முதன்மை தேர்தல் அதிகாரியின் தவறால் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், தவறு குறித்து முதன்மை அதிகாரிகள் சவுரிராஜன், விக்ரம் கபூரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர்இடைத்தேர்தல்எண்ணிக்கைசந்தீப் சக்சேனாநாளைவாக்குவாக்குச்சாவடிவாக்குப்பதிவு
Comments (0)
Add Comment