ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் போட்டியிடாது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என அக்கட்சியின் தமிழக கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்தால் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் பரிசீலனை செய்யும் என்ற தனது அறிவிப்பிற்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை என இளங்கோவன் தெரிவித்துள்ளார்

 ஆர் கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனைத் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை தமிழக காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளதாக ஈவிகேஸ் இளங்கோவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர்இடைத்தேர்தல்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்காங்கிரஸ்தமிழக காங்கிரஸ் கட்சிதேர்தல் ஆணையம்
Comments (0)
Add Comment