ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனுதாக்கல் நாளை முடிவடைகிறது

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் சமூக ஆர்வலர் கே.ஆர்.ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமி உள்பட 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 5-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, அவைத்தலைவர் இ.மதுசூதனன்(மாற்று வேட்பாளர்) மற்றும் 8 பேரும், 6-ந்தேதி காந்தியவாதி சசிபெருமாள், தமிழ் மாநில கட்சி ஆர்.சி.பால்கனகராஜ் உள்பட 7 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

நேற்று 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து இதுவரை மொத்தம் 27 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர்(சி.பி.ஐ.) சி.மகேந்திரன் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை 11-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு 13-ந்தேதி கடைசி நாளாகும்.

ஆர்.கே.நகர்இடைத்தேர்தல்சட்டமன்ற தொகுதிதண்டையார்ப்பேட்டைவேட்புமனு
Comments (0)
Add Comment