தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடைபெற்றது. இதில், 53 மனுக்கள் பெறப்பட்டன. 11-ந்தேதி நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா மனு உள்பட 32 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையிலும் தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு இன்று கடைசி நாள் ஆகும். அதனடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. நேற்று யாரும் வேட்புமனுவை வாபஸ் பெற முன் வரவில்லை.