ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: வரும் 21-ந் திகதி முதல்வர் ஜெயலலிதா பிரசாரம்

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா 21-ந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

அன்று மாலை 3 மணிக்கு மேல் வீட்டில் இருந்து பிரச்சார வேனில் புறப்படும் அவர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய ஐந்து இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசி வாக்குசேகரிக்க உள்ளார். ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்கள் மேலும் இரண்டு இடங்கள் அதிகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். ஜெயலலிதா வருகையையொட்டி, ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அ.தி.மு.க.வினர்ஆர்.கே.நகர்இடைத்தேர்தல்பிரசாரம்பொதுமக்கள்முதல்வர்வாக்குசேகரிப்பு
Comments (0)
Add Comment