ஆறாயிரம் பேர் உட்கொள்ளக்கூடிய இராட்சத பீட்சா – இலங்கையில்…

நுவரெலியாவில்  பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்  அங்குபணிபுரியும் சமையற் கலை வல்லுனர்கள்  ஆறாயிரம் பேர் உண்ணக்கூடிய  இராட்சத ஸ்டாபரி பீட்சா ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

ஸ்டோபரி பழங்களைக் கொண்டு இந்த பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பீட்சாவை தயாரிப்பதற்கு சுமார் இருநூறு கிலோ கிராம்  ஸ்டாபரி பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய மூலப்பொருட்களுடன் இந்த பீட்சாவின் மொத்த எடை 1,400 கிலோ கிராம் ஆகும்.

இந்த பீட்சாவை வெளியிடும் நிகழ்வில் நுவரெலியா மாநகரசiபியன் மேயர் சந்தனலால் கருணாலால் மற்றும் இலங்கை சுற்றுலாசபையின் தலைவர் காவன் ரட்நாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

நுவரெலியாவில் பயிர்ச் செய்கை செய்யப்படும் ஸ்டாபரியை உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த  பீட்சா இன்று முதல் பத்து நாட்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என குறித்த ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்த  ஹோட்டல் பணியாளர்கள் இதற்கு முன்னதாக உருளைக் கிழங்கைக் கொண்டு உலகின் மிகப் பெரிய கேக் தயாரித்து சாதனை படைத்திருந்தமையும்   குறிப்பிடத்தக்கது.

ஆறாயிரம்பேர்இலங்கைநுவரெலியாபீட்சா
Comments (0)
Add Comment