சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரின் வாக்குமூலங்கள் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட்டன.
கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு, சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் நேரில் ஆஜராகினர். அப்போது, 14 பேரின் வாக்குமூலங்கள் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே தகவல் ஒலிபரப்புத்துறை முன்னாள் இயக்குனர் நவில் கபூரை குறுக்கு விசாரணை செய்ய கனிமொழி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
கலைஞர் தொலைக்காட்சியின் முக்கிய இயக்குனர்கள் கூட்டத்தில், கனிமொழியும் கலந்து கொண்டார் என்பதை அப்போது அவர் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, சிபிஐ தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.